பாடல் எண் : 66 - 7
நாக்கொண் டுபர வும்மடி யார்வினை
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன்
மாக்கொள் சோலை வலஞ்சுழி யீசன்றன்
ஏக்கொ ளப்புர மூன்றெரி யானவே.
7
பொ-ரை: நாவினைக்கொண்டு இசை பாடித்தொழும் அடியார்களின் வினைகளைப் போக்கவல்ல முறுக்கமைந்தசடையையுடைய புண்ணியனாகிய நீண்ட சோலை சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவன் தன் ஓர் அம்பு கொள்ளவும் முப்புரங்களும் எரிக்கப்பட்டன.
கு-ரை: புரிசடை - முறுக்குண்ட சடை. மாக்கொள் - அடர்ந்திருத்தலால் கருமை நிறத்தைக்கொண்ட. ஏ கொள - அம்பு தொட்ட அளவால். மாக்கொள் சோலை - மாமரங்களைக்கொண்ட சோலை.