பாடல் எண் : 67 - 1
படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள்
உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம்
புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே.
1
பொ-ரை: படைக்கலங்களும், பூதமும், பாம்பும், மான்தோல் உடையும் தாங்கிய உத்தமராகிய பெருமானுக்கு இடமாகிய, பக்கமெலாம் பொருந்திய பூம்பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்தை அடையவல்லவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை.
கு-ரை: படையும் - மழு, சூலம் முதலிய ஆயுதங்களையும். புல்வாய்அதள் - மான்தோல். தங்கிய - தரித்த. புடை நிலாவிய - ஊர்ப்புறங்களில் விளங்கிய. அல்லல் - துன்பம்.