|
பொ-ரை: அறியாமையை உடைய நெஞ்சமே! ஏற்றினை ஏறினாலென்ன, பேய்கள் படைகளாகிலென்ன, புற்றினைப் பொருந்திய அரவை அணியாகப் பூண்டாலென்ன, நீ என்றும் சோற்றுத் துறையர்க்கே சுற்றியும் பற்றியும் பணிசெய்வாயாக. கு-ரை: பெற்றம் - எருது. பேய்ப்படை - ஊழிக்காலத்திரவில் இடுகாட்டுள் ஆடும்போது அப்பெருமானது படைகள், பேய்கள். ஆடரவேயது பூணிலென் - பாம்பணிந்தாலென்ன. சுற்றி - வலம்வந்து. பற்றி - விடாதுபற்றி. நீ இவற்றை இழிவெனக் கருதாது பணிசெய் என்க. |