|
பொ-ரை: மனிதர்களே! நீர் துன்பங்களால் வாடிவருந்தாமல் அருச்சுனனுக்கு வேடனாய்வந்து அருள்செய்த திருவெண்காடனார் உறைகின்ற கிளைகள் நீண்ட பொழிலை உடைய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக. கு-ரை: விசயற்கு - அருச்சுனனுக்கு. கோடுநீள் - மரக்கொம்புகள் நீண்டுள்ள. அடியாரிடர் தீர்க்க இறைவன்தானே வரும் என்பது குறிப்பு. |