பாடல் எண் : 69 - 6
ஆற்ற வும்அவ லத்தழுந் தாதுநீர்
தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளி
காற்று மாகிநின் றான்றன் கருவிலிக்
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.
6
பொ-ரை: நீர், மிகவும் துன்பத்தில் அழுந்தாமல், தோற்றுகின்ற தீ, நீர், நிலம், விசும்பு, காற்று ஆகி நின்றவனும், கூற்றுவனைக் காய்ந்தவனும் ஆகிய பெருமானுக்குரிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக.
கு-ரை: ஆற்றவும் - மிகவும். அவலத்து - துன்பத்து. நீர் - நீங்கள். தோற்றும் - விறகு முதலியவற்றால் வெளிப்படுத்தப்படும். காய்ந்தவன் - சினந்தவன்.