|
பொ-ரை: நில்லாத வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப் பொல்லா நெறியின்கண் வினைகளைச் செய விரும்பாது, நீர், கல்லால் நிறைந்த மதில் சூழ்ந்து தண்ணியதும் கொல்லேறாகிய இடபத்தினை ஊர்வானுக்குரியதும் ஆகிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக. கு-ரை: நில்லா - நிலையில்லாத. பொல்லா ஆறு - தீயவழி. புரியாது - விரும்பி எப்பொழுதும் செய்யாது. கல்லாரும் மதில் - கற்களால் கட்டப்படுதலைப் பொருந்திய மதில். கொல்லேறு - கொம்பினால் கொல்லத்தக்கதாகிய சினவிடை. |