|
பொ-ரை: மனிதர்களே! நான் சொல்லும் இதனை நம்பிக் கேட்பீராக; நாள்தோறும் தேவர்கள் 'எம்பெருமான்!' என்று ஏத்தும் ஏகம்பத்து இறைவனார் உறைகின்றதும், பூங்கொம்பு போன்ற பெண்கள் பயில்வதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக. கு-ரை: நம்புவீர் - உறுதியைக் கேட்டுணரும் விருப்பமுடையீர். நம்பு - விருப்பம். எம்பிரான் - எமது தலைவன். ஏத்தும் - வணங்கும். கம்பனார் - திரு ஏகம்பத்துறையும் பெருமானார். கம்பன் - பிறருக்கு நடுக்கத்தைச் செய்வன். கொம்பனார் - பூங்கொடி போன்ற அழகிய பெண்கள். |