முகப்பு |
தொடக்கம் |
|
பாடல் எண் : 7 - 11 |
விண்ட மாமலர் மேலுறை வானொடும் கொண்டல் வண்ணனுங் கூடி யறிகிலா அண்ட வாணன்த னாரூ ரடிதொழப் பண்டை வல்வினை நில்லா பறையுமே.
|
|
|
11 |
|
பொ-ரை: விரிந்த மலர்மேலுறை பிரமனும், மேக வண்ணனாகிய திருமாலும் கூடி அறியகில்லாத திருவாரூர் அண்டவாணனது திருவடிகளைத் தொழப் பழைய வல்வினைகள் நில்லாமற் கெடும். கு-ரை: கொண்டல் - மேகம். ஆரூர் அண்டவாணன் தன் அடிதொழ எனக்கொண்டு கூட்டுக. |
|
|