|
பொ-ரை: கங்கைச் சடையரும், திருநீலகண்டரும், அரவாகிய ஆரம் உடையவருமாகிய பெருமான் உறையும் அணி ஆரூர்த் தலத்தைத் தூரத்தே கண்டு தொழுவார் வினைகள் தூளியாகிக் கெடும். கு-ரை: இத்திருப்பாடல்: ஆரூர் நினைத்துத்தொழ முத்தியளிப்பது என்கிறது. நீரை - கங்கையை; நிமலன் - குற்றமற்றவன்; காரொத்தமிடற்றர் - மேகத்தை ஒத்த நீலகண்டத்தர்; கனல்வாய்அரா - கனல் போன்ற நஞ்சை வாயின் கண்ணே உடைய பாம்பு. ஆரம் - மாலை. அணி - அழகு. தூரத்தேதொழுவார் - திருவாரூரை நினைந்து தூரத்திலிருந்தே வணங்குவார். வினை - பழவினை நிகழ்வினைகள். தூளி - தூசி, பொடி. |