|
பொ-ரை: ஆதிக்கண் தோன்றியநாதனும், வலியுடைய இடபத்தின்மேல் அமரும் பூதநாதனும், புலித்தோலாடையனும், வேதநாதனும் ஆகிய பெருமான் விசயமங்கையில் உள்ளான்; அவன் திருவடிகளைப் புகழ்ந்து உரைக்க வல்லார்க்குப் பாவம் இல்லை. கு-ரை: ஆதிநாதன் - எல்லா உலகிற்கும் ஆதியாய் முளைத்த தலைவன். அடல் - வலிமை. விடை - இடபம். பூத நாதன் - பூதகணங்களின் தலைவன். புலியதள் - புலித்தோல். வேதநாதன் - வேதங்களால் புகழப்படும் தலைவன் அல்லது வேதங்களின் தலைவன். |