|
பொ-ரை: முல்லைநிலத்துக்குரிய இடபக்கொடியையும், மேருமலையாகிய வில்லையும் பொருந்த உடையவனாகிய விசயமங்கையின் அருட்செல்வ! போற்றி! என்று உரைப்பார்க்குத் தென்திசையில் ஏறுதலும், இனிய புகழும் உளதாகும். கு-ரை: கொல்லை - முல்லைநிலக்காடு. ஏறு - மாலாகிய இடப ஏறு. ஏற்றுக்கொடி - இடபக்கொடி. பொன்மலை - மேருமலை.வில்லை ஏற்றுடையான் - மேரு மலையாகிய வில்லை ஏற்றுக்கொண்டவன். தென்றிசை எல்லையேற்றலும் - தெற்கில் உளதாய எமனுலக எல்லையில் காலன்வந்து வரவேற்று இன்சொல் கூறுதலுமாம் என்பதாம். வணங்கிவர வேற்பான் என்க. இன்சொலும் - இன் சொல்கேட்கும் தகுதிப்பாட்டையும். ஆகும் - கொடுப்பதாகும். எமனால் வழிபடப்படுவர் என்றபடி. |