|
பொ-ரை: கண்ணும் பல்லும் சிந்திவிட்டகபாலத்தைத் தம் அழகியகைக்கொண்டு உண்ணுகின்ற பலிக்கு எங்கும் திரிகின்ற உத்தமனும், வெண்பிறையைக் கண்ணியாக உடையானுமாகிய விசயமங்கையின் நண்புக்குரிய கடவுளைத் தொழப்பெற்றது நன்மையேயாகும். கு-ரை: கண்பல் உக்க - கண்களும் பற்களும் உதிர்ந்த. கபாலம் - மண்டையோடு. அங்கைக்கொண்டு - அழகிய திருக்கரத்தே கொண்டு. உண்பலிக்கு உழல் - உண்ணும் பிச்சைக்கு வருந்தித் திரிகின்ற. உள்ளொளி - தன்னுள்ளே ஒளியையுடைய. கண்ணி - தலைமாலை. நண்பன் - தோழனாயிருப்பவன். |