|
பொ-ரை: பாண்டுவின் மகனாகிய பார்த்தன் (அருச்சுனன்) பணிகள் செய்து தான் விரும்பிய நல்வரத்தைக் கொண்ட விசயமங்கையில் உறையும் ஆண்டவன் திருவடியே நினைந்து ஆசையால் அவனைக் காணுதலே கருத்தாக இருப்பன் அடியேன். கு-ரை: பாண்டுவின் மகன் - பாண்டு என்னும் குருகுலத் தரசனுடைய மகன். பார்த்தன் - அர்ச்சுனன். பணி செய்து - தொண்டு செய்து. வேண்டும் - விரும்பும். தலவரலாறு கூறியபடி. |