|
பொ-ரை: மயக்கந் தீர்தற்குரிய மனிதர்களே! அடியேன் கூறுவதை வந்து கேட்பீராக; வெந்த திருநீற்றை அணிந்தவனாகிய விசயமங்கைப் பெருமான் தன்னைச் சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனத் தன் உறவுடையவராக்கி உய்யக் கொள்வான்; காண்பீராக. கு-ரை: கேண்மின் - கேளுங்கள். மயல் தீர் - அறியாமை நீங்கிய. சிக்கென - உறுதியாக. பந்து - உறவினன். |