|
பொ-ரை: நீண்ட கடல் சூழ்ந்த மங்கலக்குடியில் வீற்றிருக்கும் மைந்தனாகிய (பெருவீரனாகிய ) பெருமான், ஆலகாலவிடத்தைச் செறிந்த அமுதமாக விரும்பி உட்கொண்டு, பஞ்சகவ்வியம் ஆடலை விரும்பி அடியேனுடைய நெஞ்சத்தை ஆலயமாகக்கொண்டு நிலை பெற்றான். கு-ரை: மஞ்சன், மைந்தன் என்பதன் போலி. வார்கடல் - நீண்ட கடல். ஆரமுதாக - பெறுதற்கரிய அமுதமாக எண்ணி, நயந்துகொண்டு - விரும்பி உண்டு. அஞ்சு - பஞ்சகவ்வியம். ஆடலமர்ந்து - அபிடேகம்கொள்ள விரும்பி. நின்றது - எழுந்தருளியது. |