|
பொ-ரை: எறும்பியூர் மலைக்குரிய எம்மிறைவன், நறுமணம் வீசும் கூந்தலையும் இளமையையும் உடைய உமாதேவி நடுக்கம் எய்திட வெண்ணிறம் கொண்ட திருக்கயிலைப் பெருமலையை வீரம் கொண்ட வாளை உடைய இராவணன் ஊன்றி எடுத்தலும், அவன் ஆற்றலை வாடுமாறு செய்தான். கு-ரை: நிறம் - வலிமை. மால்வரை - பெரிய மலை. ஊன்றி - கையை ஊன்றி. நறுங்குழல் - மணமுள்ள கூந்தல். மறம் - வலிமை. |