பாடல் எண் : 74 - 4
நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை
மறங்கொள் வேல்கண்ணி வாள்நுதல் பாகமாய்
அறம்பு ரிந்தருள் செய்தவெம் அங்கணன்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே
.
4
பொ-ரை: எம் இறைவன் நீலநிறம் கொண்ட கண்டத்தை உடைய நின்மலனும், மறம் கொண்ட வேல்போன்ற கண்ணையும், ஒளியுடைய நுதலையும் உடைய மங்கை ஒருபாகமாகி அறம் புரிந்து அருள் செய்த எம் அண்ணலும் ஆகிய எறும்பியூர் மலையினன் ஆவன்.
கு-ரை: நிறங்கொள் - நீல நிறத்தைக் கொண்ட. நின்மலன் - குற்றமற்றவன். மறங்கொள் வேல் - வீரச்செயல் செய்யும் வேல். வாள் - ஒளி. அறம்புரிந்து - அறத்தை விரும்பி. அங்கணன் - சிவன்.