பாடல் எண் : 74 - 5
நறும்பொன் நாண்மலர்க் கொன்றையும் நாகமும்
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான்
உறும்பொன் மால்வரைப் பேதையோ டூர்தொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே
.
5
பொ-ரை: நறுமணமும் பொன்போன்ற நிறமும் உடைய கொன்றையின் புதிய பூக்களும், நாகமும் சுரும்புகள் அடர்ந்தது போன்ற சிவந்த சடையின்கண் தூயமதியோடு வைத்து, விண்ணை உறும் பொன்மலையாகிய இமவான்மகளாகிய உமாதேவியோடு ஊர் தோறும் வீற்றிருக்கும் எங்கள் இறைவன், எறும்பியூர் மலையினன்.
கு-ரை: நறும்பொன் - குற்றமற்ற தூய பொன்போன்ற. நாண்மலர் - புது மலர். நாகம் - ஞாழல் மரம். துறும்பு - நெருங்கிய அல்லது பொருந்திய என்க. வான்உறும் - ஆகாயத்தை அளாவும். பொன்மால்வரை - பொன்மயமான பெரிய இமயமலை. மால்வரைப் பேதை - பார்வதி.