|
பொ-ரை: அறிவற்ற நெஞ்சமே! பெருந்துன்பங்களால் நாள்தோறும் மற்று இதனை மறந்து மாறுபட்டு நீ நினையாதே; புறத்தேகோலம் செய்யப்பெற்ற இக்குடிசையில் என்னை இட்டு எறும்பியூர் அரன் செய்த இயற்கை இது. கு-ரை: பேரிடர் இது மறந்து - பெரிய துன்பத்தை விளைப்பதாகிய இவ்வுடலை மறந்து. திறம்பி - உடலுணர்வினின்று மாறுபட்டு. நினையேல் - அதனையே நினையாதொழிவாயாக. புறஞ்செய் - உள்ளழுக்குத் தெரியாதவாறு புறத்தே செய்யும். கோலக்குரம்பை - அழகிய உடலாகிய வீடு. |