|
பொ-ரை: மரத்தின்கண் இருக்கும் கொக்கைப்போல வாய்விட்டுக்கூவி, தீயகுணங்களாகிய பொருள்களையே சுமந்து திரிந்து வருந்தாமல், கால்வாய்கள் வழியாகப் பரந்து பாயும் காவிரி நீர் அலைக்கின்ற கரையில் உள்ளதாகிய குரக்குக்காவை அடைய, குற்றங்கள் கெடும். கு-ரை: மரக்கொக்காமென - மரத்தின்கண்ணே உறையும் கொக்குப் போல. வாய்விட்டலறி - ஓலமிட்டு. சரக்கு காவி- இவ்வுலகவாழ்வில் ஏற்படும் இன்ப துன்பச் சரக்குகளைச் சுமந்து. சினமென்னும் சரக்கை ஏற்றி என்றார் பிறிதோரிடத்தும். அயராது - வருந்தாது. கால்பரக்கும் - பல கால்வாய்களாகப் பிரிந்து விரியும். |