|
பொ-ரை: பக்கமெங்கும் கலந்து எழுகின்ற காவிரியின் வயல்களனைத்தினும் சென்றிடும் செம்புனல் வெள்ளம் கொய்மீன்களைக் கொணரும் குரக்குக்காவில் உள்ள ஐயனைத்தொழும் அடியார்களுக்கு அல்லல் இல்லை. கு-ரை: கையனைத்தும் - இரு பக்கங்கள் எங்கணும். கலந்தெழு - சென்று பரவித் தோன்றுகின்ற. செய் - வயல். கொய் - மீன் இனங்களில் ஒன்று. செம்புனல் கொணரும் என்க. ஐயன் - அழகியன் அல்லது தலைவன். அல்லல் - துன்பம். |