|
பொ-ரை: வெள்ளம் பொருந்தி விரிந்தெழுங் காவிரி இட்ட நீரானது வயல் எங்கும் பரந்திடுதலால் சிறந்து, மாமுழவுகள் கொட்ட ஓங்கும் குரக்குக்காவின் விருப்பமாய் இருப்பவர்களுக்கு இடர்கள் இல்லை. கு-ரை: வெள்ளம் விட்டு - வெள்ளமாய்ப் பெருகி. விரிந்து எழு - பரந்து தோன்றுகின்ற. காவிரி இட்ட நீர் - காவிரியாறு தந்த தண்ணீர். கொட்ட - அடிக்க. மாமுழவு - பெரிய முழவு என்னும் வாச்சியம். ஓங்கும் - ஒலி மிகுகின்ற. இட்டமாயிருப்பார்க்கு - விருப்பமாயிருப்பார்க்கு. |