|
பொ-ரை: மேல் உலகத்திலுள்ள தேவர்களோடு விரிந்த கடலில் துயிலும் திருமாலும், நான்முகனும் ஆகியவராலும் அளக்கவியலாத பெருமான் உறைவதும், அழகு மிக்க மாளிகையாகிய கோயிலை உடையதுமாகிய குரக்குக்காவின்பால் வாழ்வோராய்த் திரிவோர்க்குப் பாவம் இல்லை. கு-ரை: மேலைவானவரோடு - மேல் உலகின்கண் உள்ளவராய தேவரோடு. விரிகடல் மால் - விரிந்த திருப்பாற் கடலின்கண் உறங்கும் திருமால். அளப்பொணா - அளத்தற்கரிய. கோல மாளிகை - அழகிய மாடவீடுகள். கோயில்பாலராய் - கோயிலுக்குச் சென்று வழிபடும் பாலராய். |