|
பொ-ரை: நீரும், மண்ணும், தீயும், வெயிலும், முகிலும், காற்றும் ஆகிய அனைத்துமாகிக் கானூரில் முளைத்த கடவுளைச் "சேர்தும்" என்ற ஒன்றை அறியாது திசைதோறும் திசைதோறும் உணர்ச்சி சிறிதும் இலராய் ஓடித் திரிவர் உலகத்தவர். கு-ரை: பார் - உலகம் (மண்). அருக்கன் - சூரியன். கார் -மேகங்கள். மாருதம் - காற்று. நீர், பார், நெருப்பு, அருக்கன், கார்மாருதமாய் முளைத்தவன் என்க. சேர்வு - தங்கியிருக்கும் ஓரிடம். ஒன்றறியாது - ஒன்று எனவைத்துக்கொள்வதை அறியாமல். திசைதிசை - பல திசைகளிலும். ஓர்வு - ஆராய்ச்சி. |