|
பொ-ரை: நெஞ்சமே! மின்னுகின்ற நீண்ட சடையையுடையவனும், வேதவிழுப்பொருளும், செந்நெல் பொருந்திய வயல் உடைய திருச்சேறையுட் செந்நெறியில் நிலைபெற்ற சோதியுமாகிய பெருமான் நம்மிடம் வந்து தங்க, நீ என்ன மாதவம் செய்தாய்!. கு-ரை: என்ன - எத்தகைய. மாதவம் - சிறந்த தவம். செய்தனை - செய்தாய். மின்னு வார்சடை - மின்னல்போல விளங்குகின்ற நீண்ட சடை. வேத விழுப்பொருள் - வேதங்களில் கூறப்படும் சிறந்த பொருளாயிருப்பவன். செந்நெல் ஆர்வயல் - செந்நெற் கதிர்கள் பொருந்திய வயல்கள். மன்னு - நிலைத்து விளங்குகின்ற. சோதி - ஒளி வடிவானவன். நம்பால் - நம்மிடத்து. வைக - நிலையாக வந்து எழுந்தருள. |