|
பொ-ரை: திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் சிறப்பை உடைய பெருமான் கழலார் திருவடிகளை மறப்பு இன்றி மனத்துள் வைத்தால், பிறப்பு, மூப்பு, மிக்கபசி, மிக்கபிணி, இறப்பு ஆகியவை நீங்கி இம்மையிலேயே இன்பம் வந்து எய்தும். கு-ரை: மூப்பு - முதுமைத் தன்மை. பெரும் பசி - மிக்க பசி. வான்பிணி - பெரிய தீராத நோய்கள். எய்திடும் - உண்டாகும். சிறப்பர் - சிறப்புடையவர். மறப்பதின்றி - மறவாமல். மனத்தினுள் வைக்க இன்பம் வந்தெய்திடும் என முடிக்க. |