பாடல் எண் : 77 - 6
தப்பி வானந் தரணிகம் பிக்கிலென்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென
் செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய
அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே
.
6
பொ-ரை: வானம் முறை தவறி (வறண்டு) உலகம் நடுங்கினால் என்ன? ஒப்பற்ற அரசர்கள் ஒருங்கு உடன் சீறிச்சினந்தால் என்ன? செப்பம் பொருந்திய சேறையுட் செந்நெறி மேவிய அப்பனார் உள்ளார்; அஞ்சுவது பின்னை எதற்கு?
கு-ரை: தப்பி - நிலைதவறி. வானம் - வானத்தில் உள்ள மழை. தரணி - நிலவுலகிற் பெய்யாது. கம்பிக்கில் என் - அசைந்தால் அதனால் விளைவது யாது? வானம் என்பதற்கு வானமண்டலங்கள் நிலை தடுமாறி அதனால் உலக இயக்கம் நடைபெறாது நின்று போனால் என்ன எனினும் அமையும். ஒப்பில் வேந்தர் - தன்னை ஒப்பார் இல்லாத அரசர். ஒருங்குடன் - ஒன்றுசேர்ந்து. சீறில் என் - நம்மைக் கோபித்தால் அதனால் விளைவது என்ன? செப்பமாம் - செம்மையோடு கூடியதாய. அப்பனார் - தந்தையாவார். என்னுக்கு அஞ்சுவது - எதற்கு நாம் அஞ்சுவது? "திண் ணென் கெடிலப்புனலும் உடையார் ஒருவர்தமர் நாம் அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்சவருவதும் இல்லை" என்ற பதிகத் திருப்பாடல்களும், "வானந்ளங்கிலென் மண்கம்பமாகிலென் இருசுடர் வீழிலென் அஞ்சல் நெஞ்சே" "எங் கெழிலென் ஞாயிறெமக்கு" என்ற திருப்பாடல்களும் அஞ்சாமையை வெளிப்படுப்பன.