பாடல் எண் : 78 - 10
வரங்க ளால்வரை யையெடுத் தான்றனை
அரங்க வூன்றி யருள்செய்த அப்பனூர்
குரங்கு சேர்பொழிற் கோடிகா வாவென
இரங்கு வேன்மனத் தேதங்கள் தீரவே.
10
பொ-ரை: வரங்களாற்பெற்ற பலத்தால் திருக்கயிலையை எடுத்த இராவணனை அழிய ஊன்றி அருள்செய்த அப்பன் ஊராகிய குரங்குகள் சேரும் பொழிலை உடைய கோடிகா இறைவனே என்று என் மனத்துக் குற்றங்கள் தீர இரங்குவேன்.
கு-ரை: வரங்களால் - இறைவனிடம் தான் பெற்ற வரங்களால். வரை - கயிலைமலை. அரங்க - கெட. ஏதங்கள் - குற்றங்கள்.