|
பொ-ரை: முல்லையையொத்த நல்ல சிரிப்புடைய உமை ஒரு பங்கில் உடையவரும், தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் உறையும் அருட்செல்வரும், முல்லை நிலத்து ஏற்றினை வாகனமாக உடைய வரும் ஆகிய கோடிகா இறைவரே என்று விரைந்து ஏத்துவார்க்குக் குற்றம் ஒன்றும் இல்லை. கு-ரை: முல்லைநன் முறுவல் - முல்லை அரும்பு போன்று வெண்மையான நல்ல பற்களை உடைய. உமை - பார்வதி. தில்லையம்பலத்தில் - சிதம்பரத்தில். உறை - உறைகின்ற. செல்வனார் - வீடு பேறாகிய செல்வத்தையுடையவர். கொல்லை - முல்லை நிலத்துக்குரிய. ஏற்றினர் - இடப ஊர்தியை உடையவர். ஒல்லை - விரைவாக. ஊனம் - குறை. |