|
பொ-ரை: நாவானது வளம் பெறுமாறு அழகிய நுதலை உடைய தலைவி இயன்ற அளவு அழகிய சடையையுடைய கோடிகா இறைவனே என்று அவன் திருப்புகழ் சொல்லி அன்பு செய்தால் பெறலாமேயன்றி அவனை இசைபாடும் வாயால் என்னை வசைபாடுகின்றாளே இந்நங்கை. கு-ரை: நாவளம் பெறுமாறும்- நம்முடைய நா பயன்தரும் இறைவன் திருப்புகழைப் பேசுவதால் நன்மையைப் பெறும்படியும். மன் நல்நுதல் - நிலைத்த அழகிய நல்ல நுதலை உடைய தலைவி; அன்மொழித்தொகை. ஆமளம் சொல்லி - ஆம் அளவும் சொல்லி எனப் பிரித்து இயன்ற அளவு அப்பெருமானை ஏத்திப் புகழ்ந்து எனப் பொருள்கொள்க. அன்புசெயின் அலால் -இறைவனிடத்து அன்பு செய்தாலல்லாமல். அன்பு செய்தால் அவனை அடையலாமேயன்றிப் பிறர் எவ்வாறு அடையமுடியும். இதை அறியாமல் அவ்ஏழை என்னை ஏசும் என்க. கோமளம்சடை - அழகிய சடை. கோடிகாவா என - கோடிகாவில் எழுந்தருளியவனே என்று. இறைவரது காதலிற்பட்டுத் தன் சொற்பழித்த மகளை நோக்கிச் செவிலித்தாய் கூற்றாகப் பாடியது. |