|
பொ-ரை: பண் பொருந்திய இனியமொழியுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவனும், இண்டையணிந்தசடையனும், இருளார்கண்டனும், யானைத்தோல் உரித்துப் போர்த்தவனும், அண்டங்களுக்கு அப்புறத்தில் உள்ளவனும் அன்னியூர்த் தலத்து இறைவனே. கு-ரை: பண்டு ஒத்த மொழி எனப்பிரித்துப் பண்ணின் இசை தங்கிய இனிய மொழி எனப் பொருள் காண்க. இருள் - கருமை. உரி - தோல். அண்டத்தப்புறத்தான்; உலகவர் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவன். 'ஏழடண்த்தப்பாலான்' (தி.6.ப.8.பா.5) பாகமாய்க் கொண்ட இண்டைச் செஞ்சடையன் எனக் கூட்டி உரைக்க. |