|
பொ-ரை: வேதங்களை இசையோடு ஓதுவோரும், விண்ணோர்க்கும் உயர்ந்தவரும், ஒளிவெண்பிறை பொருந்திய சடையுடைய தலைவரும், நீதியினால் தம் அடியார்களுக்கெல்லாம் ஆதியாகி நின்றவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே. கு-ரை: சோதி - ஒளி. துன்று - நெருங்கிய. அல்லது படர்ந்த. அடியார்தமக்கு ஆதி - அடியவர்களால் தம் உணர்வின் முதல் எனக் கருதப்படுவோன்; "போற்றி என் வாழ்முதல் ஆகியபொருளே' (தி.8 திருவாசகம் - திருப்பள்ளி எழுச்சி - 1) என்றாற்போல. |