|
பொ-ரை: வெந்த திருநீறு மெய்யின்கண் பூசிய நலம் வாய்ந்தவரும், நறுமலர் சூடும் கருத்தினராகிய அன்பர் சிந்தைகளில் நிறைந்த சிவனாரும், சிவந்த தீயின் வண்ணம் உடையவரும், அழகிய தண்ணளி உடையவரும் அன்னியூர்த் தலத்து இறைவரே, காண்பீராக. கு-ரை: வெந்தநீறு - திருநீறு. "தமது அந்தமில் ஒளி அல்லா ஒளியெலாம் வந்து வெந்து அற வெந்தநீறு - மற்று அப்பொடி "நன்மேனி - அநாதிமுத்த சித்துஉரு. நறுமலர் சூட்டி வழிபடுவேம் என்னும் கருத்தினர் தம் அடிமனத்திற் பொருந்திநின்று மங்கலக் குணங்களையும் பேரின்பத்தையும் தோற்றுவிப்பவன் என்க. சிவனார் - மங்களத்தைச் செய்பவர். இன்பவடிவினர். செய்ய தீவண்ணர் - தீப்போன்ற செய்ய நிறத்தர். அந்தணாளர் - உயிர்களின் நன்மையின் பொருட்டு அறம் உரைத்து, அதன் வடிவாகவும் பயனாகவும் நிற்றலின் அந்தணாளர் எனப்பட்டார்; "அறவாழி அந்தணன்" என்பது திருக்குறள் (8) ஆழி - கடல்). |