முகப்பு |
தொடக்கம் |
|
பாடல் எண் : 8 - 7 |
ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல் வானை வானவர் தாங்கள் வணங்கவே தேனை யார்குழ லாளையொர் பாகமா ஆனை யீருரி யாரன்னி யூரரே.
|
|
|
7 |
|
பொ-ரை: தசை பொருந்தியிருந்த வெண்டலையிற் பலி கொண்டு திரியும் பெருமான் வானவர் வணங்குமாறு, உமாதேவி யாரை ஒரு பாகமாகக்கொண்டு ஆனைத்தோல் போர்த்தவர் அன்னியூர்த்தலத்து இறைவரே. கு-ரை: ஊனை, தேனை - என்பவற்று ஐ சாரியை, ஈர் உரி - ஈர்ந்தஉரி, குருதிதோய்ந்து குளிர்ந்த உரி எனினுமாம். |
|
|