|
பொ-ரை: கங்கையாகிய வெள்ளம் உள்ள விரிசடையோடு கூடிய நந்தியாகிய பெருமானைக் கள்ளமுள்ள மனத்தவர் காணும் திறமை இல்லாதவர்கள்; சேறு நிறைந்த வயலை உடைய அன்பிலாலந்துறையின்கண் உள்ளவாறு சில ஊமையர் அறியார். கு-ரை: வெள்ளம் - கங்கை. நந்தி - சிவபெருமானுக்குரிய பெயர். கள்ளம் - வஞ்சகம். காண்கிலார் - காணமாட்டார். அள்ளல் - சேறு. ஆர் - பொருந்திய. உள்ளவாறு - உள்ளபடி. |