|
பொ-ரை: நுண்ணிய நூல் பல கற்ற பிரமனும் திருமாலுமாகிய இருவரும் மாறுபட்டு எங்கும் திரிந்து இளைத்தும் காணும் திறமையற்றனர்; அணங்கினை ஒருபாகம் உடைய இறைவன் அன்பிலாலந்துறையை நும் வினைகள் மாய்ந்து அறும் வண்ணம் வணங்குவீராக. கு-ரை: நுணங்கு - நுண்ணிய. நூல் - வேதநூல்களை; ஓதும். அயன் - பிரமன். பிணங்கு - மாறுபட்டு. எய்த்தும் - வருந்தி இளைத்தும். காண்கிலா - காணாத. அணங்கன் - அணங்கை உடையவன். நும் வினை மாய்ந்தறும் வண்ணம் வணங்கும் என்க. வணங்கும் - வணங்குங்கள். |