|
பொ-ரை: எல்லாப் பொய்யும் உரைக்கும் சமணரும், சாக்கியருமாகிய சிறுமை உடையவர்கள் பேச்சைக் கேளாது எழுமின்; ஐயனும் எம்பெருமானும் அன்பிலாலந்துறையில் எழுந்தருளியுள்ள மெய்யனுமாகிய இறைவன் சேவடி ஏத்துவார் மெய்யர் ஆவர். கு-ரை: பொய்யெலாம் - பொய்யாயின பலவற்றையும். சமண் சாக்கியக் கையன்மார்-சமண மதக்கொள்கையினராய சாக்கியர் என்னும் பிரிவினர். எழுமின்-புறப்படுங்கள். மெய்யன்-உண்மை வடிவானவன். ஓ-அசை |