பாடல் எண் : 81 - 4
தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான்
காண்டலுமெளி யன்னடி யார்கட்குப்
பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்
காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.
4
பொ-ரை: தூண்டிய சுடர்போல் ஒக்கின்ற சோதிவடிவினனாகிய பெருமான் அடியார்களுக்குக் காண்டல் எளியவன்; பாண்டிக் கொடுமுடி மேவிய பரமனைக் காண்போம் என்று கூறுவார்க்கு ஏதும் கருதவொண்ணா இயல்பினோன்.
கு-ரை: தூண்டிய சுடர்போல் ஒக்கும் - தூண்டப்பட்ட விளக்குப்போல என்று உவமை சொல்லத்தகும். காண்டலும் எளியன் - காட்சிக்கும் எளியன். அடியார்களுக்குக் காண்டலும் எளியன் என்க. காண்டும் என்பவர்க்கு - எப்படியேனும் கண்டே தீருவேன் என்று செருக்கோடு காண்பார்க்கு. ஏதும் கருத்தொணான் - எந்த அளவிலும் கருத்தின்கண் புலப்படமாட்டாதவன்.