|
பொ-ரை: விரிந்தமாமலர்களைக் கொண்டு விரைந்து நீர், தேவர்நாயகனும் , வண்டுசேர் பொழில்களை உடைய வான்மியூர் ஈசனுமாகிய இறைவன் சேவடியைச் சூழ்வீர்களாக; முன்பு செய்த பாவங்கள் கெடும். கு-ரை: விண்ட- முகையவிழ்ந்து மலர்ந்த. மா-சிறந்த. அண்ட நாயகன் தன்-எல்லா உலகங்களுக்கும் தலைவனாகிய பெருமானுடைய. அடி - திருவடிகளை. சூழ்மின்கள் - வலம் செய்து வணங்குங்கள். பண்டு செய்த பாவம்- முற்பிறப்பில் செய்த பிறவிக்குக் காரணமான பழவினை. பறைந்திடும்-நீங்கும.் வான்மியூர் ஈசனை எனக் கூட்டுக. |