பாடல் எண் : 82 - 2
பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத்
தருளு மாவல்ல ஆதியா யென்றலும்
மருள றுத்திடும் வான்மியூ ரீசனே.
2
பொ-ரை: பொருளும், சுற்றத்தாருமாகிய பொய்ம்மையை விட்டு நீர் மருளுதற்குரிய மாந்தரை மாற்றி மயக்கம் நீக்கி அருளுமாறுவல்ல ஆதியாய்! என்று கூறியதும் வான்மியூர் ஈசன் மயக்கம் நீக்குவன்.
கு-ரை: நீர்-நீங்கள். மருளும் மாந்தரை- உலக வாழ்வில் மயங்கி நிற்கும் மக்களை. மயக்கு அறுத்து-அறியாமையாகிய மயக்கத்திலிருந்து விடுவித்து. அருளுமாவல்ல-அருள் செய்யவல்ல. ஆதியாய்-முதன்மையானவனே. என்றலும்-என்று கூறியவுடனே. மருள்- பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் அறியாமையாகிய இருட்டு அறுத்திடும் - நீக்கும்.