பாடல் எண் : 82 - 5
படங்கொள் பாம்பரைப் பால்மதி சூடியை
வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத்
தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை
மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே
.
5
பொ-ரை: படம் கொண்ட பாம்பு உடையவனும் , பால் மதி சூடியவனும் , மாலைகள் கொண்ட மென்முலைமாதாகிய உமையொரு கூறனுமான வான்மியூர் ஈசன், தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினைகள் மடங்க முன்னே வந்து நின்று அருளுவான்.
கு-ரை: படங்கொள் -படத்தைக் கொண்ட. பாம்பரை- பாம்பணிந்தவரை. மதிசூடியை - பிறைமதி சூடியவரை. வடங்கொள் - முத்துமாலைகளை அணிந்த. தொடர்ந்து நின்று -இடையறாது சிந்தித்து நின்று. தொழுதெழுவார்- வணங்கி எழுவார். மடங்க நின்றிடும் - சுருங்கும். வான்மியூர் ஈசனைத் தொழுது எழுவார் வினை மடங்கும் என்க.