பாடல் எண் : 82 - 6
நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென்று
அஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல்
வஞ்சந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.
6
பொ-ரை: "நெஞ்சில் நினைக்க ஐம்புலக் கள்வர் நினைக்கவையார்; பஞ்சனைய மெல்லடியாளாகிய உமைபங்கனே!ழு என்று அஞ்சிப் புதிய மலர்கள் தூவி அழுதீரேல் வான்மியூர் ஈசன் உம் வஞ்சனையைத் தீர்ப்பர்.
கு-ரை: நெஞ்சில் -மனத்தில். ஐவர் -ஐம்பொறிகள். நினைக்க -பல வழிகளிலும் மனத்தை ஈடுபடுத்திப் பலவற்றை நினைக்க. நினைக்குறார்- இறைவனை நினைத்தலைப் பொருந்தாராயினர். பஞ்சின் மெல்லடியாள்-பஞ்சு போன்ற மென்மைத் தன்மை வாய்ந்த காலடிகளை உடையவ பங்கன் - உமையவளை ஒருபாகத்தில் கொண்ட சிவன். அஞ்சி - அச்சத்துடனே. நாண் மலர் - புதிய மலர்கள். அழுதிரேல் - இறைவனைக் கூவி அழைத்து அழுவீர்களேயானால். வஞ்சம் தீர்த்திடும்- நினைக்க ஒட்டாது தடுத்து இடுக்கண் செய்யும் புலனாசையை நீக்கும்.