பாடல் எண் : 82 - 7
நுணங்கு நூலயன் மாலு மறிகிலாக்
குணங்கள் தான்பர விக்குறைந் துக்கவர்
சுணங்கு பூண்முலைத் தூமொழி யாரவர்
வணங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.
7
பொ-ரை: நுண்ணிய நூல் பல உணர்ந்த பிரமனும் திருமாலும் அறியும்வல்லமை இல்லாத பேரருட் குணங்களைப் பரவி சுணங்கு படர்ந்த பூண்களை உடைய முலையையும் தூய மொழியையும் உடைய பெண்கள் வணங்க வான்மியூர் ஈசன் நின்றிடுவான்.
கு-ரை: நுணங்கு - நுண்ணிய. நூல் - வேதங்கள். பரவி - தோத்திரித்து. குறைந்து உக்கவர் - செருக்கொழிந்து மனமுருகியவர். சுணங்கு - பசலை. பூண் - அணிகலன். தூமொழியாரவர் - இறைவன் புகழ் மொழிகளைப் பேசுபவர்களாகிய பெண்கள். உக்கவரும், மொழி யாரவரும் வணங்க என எண்ணும்மை விரிக்க. வணங்க நின்றிடும் - வணங்க எழுந்தருளும்.