|
பொ-ரை: வான்மியூர் ஈசன் முதலாகிய மூர்த்தி அரனும் அயனும் திருமாலும் ஆயவன். பாதிபெண்ணுருவுமாகிய பரமன் என்று ஓதி உள்ளம் குழைந்து ஏத்த வல்லமை உடையவர்களின் துன்பங்களைத் தீர்த்திடுவான். கு-ரை: ஆதி - எல்லார்க்கும் முன்னே தோன்றியவன். அரனாய் அயன் மாலுமாய் - அரன் அயன் அரி ஆகிய மும்மூர்த்திகளாகியும். பரமன் - மேலானவன். உள் குழைந்து - மனமுருகி. வாதை - பிறவித் துன்பம். |