|
பொ-ரை: ஓர் அம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவனும், தான் அணியாகப் பூணப் பாம்பையும் ஆமையையும் தாங்கியவனும், காண இனியவனும் ஆகிய கடல் நாகைக் காரோணத்தான் என நம்வினை ஓயும்! கு-ரை: பாணத்தால் - அம்பால். மதில்மூன்று - திரிபுரம். எரித்தவன் - எரியச்செய்தவன். பூண - அணிய. பொறுத்தவன் - சுமந்தவன். காணத்தான் இனியான் - காணுதற்கு இனிய அழகியவன். இனியதைச் செய்பவன். என - என்றுசொல்ல. ஓயும் - ஒழியும். காண - தரிசித்துப் பெருமைகளைக் காண. |