பாடல் எண் : 83 - 6
அலங்கல் சேர்சடை யாதிபு ராணனை
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்
கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே
.
6
பொ-ரை: மாலைகள் சேர்ந்த சடையையுடைய ஆதி புராணனை, மலைமங்கையை ஒருபாகம் விரும்பிக் கொண்டவனை, கப்பல்கள் சேரும் கடல்நாகைக்காரோணனை வலம் கொண்டு வணங்குவார் வினைகள் மாயும்.
கு-ரை: அலங்கல் -மாலை. ஆதிபுராணன் -முதலில் தோன்றிய பழையவன். விலங்கல் மெல்லியல் -மலைமகள். பாகம் விருப்பனை - பாகமாக விரும்பியவனை. கலங்கள் -கப்பல்கள்.