|
பொ-ரை: நல்லெண்ணமில்லாத இராவணன் மலையை எடுக்க, அவன் திருந்துமாறு திருவுளத்து எண்ணி, அவன் நீண்ட முடிகள் பத்தையும் இறுத்தவனுக்குரிய ஞானக்கண்ணுடையவர் கருதி உணரும் காட்டுப்பள்ளியை நண்ணுவாருடைய வினைகள் நாசம் அடையும். கு-ரை: எண்இலா - எண்ணமில்லாத (நம் செருக்கு இறைவன் திருமுன் நிற்குமா என்ற எண்ணம்). எண்ணி - இவனை நாம் திருத்துவது நிக்ரகத்தாலன்றியில்லை என்று எண்ணி. இறுத்தவன் - நெரித்தவன். கண்ணுளார் - அறிவுக்கண் உள்ள சான்றோர்கள். |