பாடல் எண் : 86 - 10
இரக்க முன்னறி யாதெழு தூதுவர்
பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே
அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார்
கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே
.
10
பொ-ரை: இரக்கமென்பதை முன்னும் அறியாது எழுந்த எமதூதுவர்கள் பரவிவந்து அழித்துப் பற்றிக்கொள்வதற்கு முன்பே, இராவணனுக்கு அருள்செய்த வாட்போக்கி இறைவர் அவர்கட்கு அகப்படாமல் தம்மடியாரை ஒளிக்கவும் ஒளிப்பர்.
கு-ரை: இரக்கம் முன்னறியாது எழு - இரக்கம் என்பதையே நம்முன் அறியாது வருகின்ற. பரக்கழித்து - இகழ்ந்து, பழித்து. பற்றுதல் முன்னமே - நம்மைப் பிடித்துக்கொண்டு போகுமுன்பாகவே. அரக்கன் - இராவணன். கரப்பாரவர் தங்கட்குக் கரப்பதும் - கரப்பாரவர் தங்கட்கே கரப்பார்.