|
பொ-ரை: பாவிகளே! எமன் விடுத்த தூதுவர்கள் வந்து வினைக்குழியிலே படுவித்தபோது கதறிப் புலம்பிப் பயன் இல்லை;அடுத்த கின்னர இசை கேட்கும் வாட்போக்கியை எடுத்தேத்தி இன்புறுவீர்களாக. கு-ரை: விடுத்த - எமனால் அனுப்பப்பட்ட. வினைக்குழிப் படுத்தபோது - நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப நரகக்குழியின் கண் போதரும் போதின்கண். தேற்றம் - தெளிவு. தெளிவுறலாகுமே - நாம் இந்நாள்வரை அறிந்தன பொய்; உண்மை இறைவன் திருவடிகளே என்ற தெளிவு ஏற்படும். |