|
பொ-ரை: எமன் வந்து அழித்திடும்போதில் முடிவு வந்து தெளிவுறல் ஆகாதன்றோ? மிகவும் அருள்செய்யும் வாட்போக்கி இறைவர்பால் விளக்கை இருள் நீங்க ஏற்றுவீராக. கு-ரை: தேற்றம் - உறுதி. விளக்கு - அறிவு. இருள் - அறியாமை. ஏ, அசை. ஆற்றவும் ஏற்றுமின் - இயன்ற அளவு இறை ஒளியை உள்ளத்தில் ஏற்றுங்கள். இருள் நீங்க - அறியாமையாகிய இருட்டுக்கெட. விளக்கு - சிவம். |